தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம ஆண்டிபட்டியில் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று அழகர்சாமி முத்துமாரியம்மன் தம்பதியினரின் விவசாயக் குடும்பத்தில் ஆசை மகனாய் அவதரித்தவர் தான் நம் ஜெகநாத். தன்னுடைய ஆரம்பக் கல்வியை கம்பம் எம் பி எம் முத்தையா பிள்ளை பள்ளியில் படித்த இவர் ஆங்கிலம் கற்க மனமில்லாமல் அரசு பள்ளியிலேயே கல்வியை தொடர்ந்தார்.தன்னுடைய அப்பாவிற்கு நிகராக சிறு வயதிலேயே விவசாயத்தில் பற்றுக்கொன்றார்.வீட்டின் கடைக்குட்டி செல்லமாக வளர்ந்த இவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவருடைய இயல்பு.பள்ளிப் படிப்பை முடித்த இவர் உயர்கல்வி பயில சென்னை தரமணி ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.ஜெகநாதன் என்பதே இவருடைய இயற்பெயர் ஆனால் அனைவரின் அன்பாலும் மிஸ்ரா எனும் புனைப் பெயரை சேர்த்து அனைவரும் அழைக்கப்படுகிறார்.
தலைவர்கள் பிறப்பதில்லை மாறாக உருவாக்கப் படுகிறார்கள் என்பது உலகப் பொதுமொழி.
இதற்க்கு சான்றாக வாழ்பவர் தான் நாம் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள்.
தன்னுடைய ஆசையை வெறும் கனவாக இருக்கக் கூடாது என்றுசிறுவயதிலிருந்தே சமுதாய கூட்டத்தில் பங்கேற்கும் பழக்கத்தை தலைவர் கொண்டிருந்ததார்.அப்போது தொடங்கியது தலைவரின் பொது வாழ்க்கை.1993 இல் மதுரை போஸ்டர் காலேஜில் நடந்த சங்க கூட்டத்திற்கு தனது தந்தைக்கு பதிலாக கூட்டத்தில் தலைவர் பங்கேற்றார்.
நம் இன மக்களுக்கு என்ன செய்வது எவ்வாறு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என்பதை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பவர் நம்முடைய தலைவர்.
நம் இன மக்களுக்கு என்ன செய்வது எவ்வாறு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என்பதை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பவர் நம்முடைய தலைவர்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்போதும் ஓங்கி குரல் ஒலித்துக்கொண்டே இருப்பார்.
நமக்காக யார் இருப்பார் என்று நினைக்கும் காலகட்டத்தில் நான் உங்களுக்காக இருக்கிறேன் என்று குரல் கொடுத்தவர்.
நான் உழைத்துக்கொண்டே இருப்பேன் நான் வளரும் வரை அல்ல என் மக்கள் வளரும் வரை.
தமிழ் இனத்தை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது தலைவரே.
தமிழகத்தின் கடைக்கோடி மண்ணில் பிறந்த மனிதரை தற்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே போற்றுகிறது என்றால் மிகையாகாது.