ஆரோக்கியம்
கட்சியின் கொள்கை வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலத்தை உயர்த்த வேண்டும்... ஆரோக்கியமாக வாழக்கூடிய உணவு முறைகளை தெளிவுபடுத்த வேண்டும்... இதுதான் நம் கட்சியின் கொள்கை.
கட்சியின் கொள்கை வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலத்தை உயர்த்த வேண்டும்... ஆரோக்கியமாக வாழக்கூடிய உணவு முறைகளை தெளிவுபடுத்த வேண்டும்... இதுதான் நம் கட்சியின் கொள்கை.
பணத்தைத் தேடி ஓடுகிறோம் என்று நீ உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறாய்..
மனம் சரியில்லை என்று நாம் தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கி கொண்டிருக்கிறோம்... உடல் ஆரோக்கியமாக இருந்தால் அது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தாகும்.. ஆரோக்கியத்தை பாதுகாப்போம் நீ ஆரோக்கியமாக இருந்தால் தான் உன் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும் உன் குடும்பம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் கட்சி ஆரோக்கியமாக இருக்கும்.. நம் கட்சி ஆரோக்கியமாக இருந்தால் தான் இந்த நாடும் நம் தேசமும் ஒட்டுமொத்த மக்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீ நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத இடத்திற்கு செல்ல முடியும்
இயற்கை உணவு முறை மற்றும் இயற்கை மருத்துவ முறைக்கு நாம் மாற வேண்டும்.. 200, 300 ஆண்டுகளுக்கு முன்பாக நம் முன்னோர்கள் என்ன உணவு பழக்கங்களை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார்கள் இயற்கை உணவு முறை மற்றும் மருத்துவத்தால் மட்டுமே அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்... என்னென்னவோ கெமிக்கல் உபயோகப்படுத்திய உணவுகளை நாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்...
நம் உயிரையே ஆட்டி படைத்த கொரோனாவை எதை வைத்து நாம் விரட்டினோம்.. கபசுர குடிநீரை குடித்து தான் கொரோனாவை விரட்டி விட்டோம்.. பொது உலகத்தில் உள்ள அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் நம் கபசுர குடிநீரை குடித்து தான் கொரோனாவை ஒழித்தார்கள்...
தினமும் ஒரு நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.. நாம் யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எதற்காக வாழ்கின்றோம் என்பதைப் பற்றி மட்டுமே அந்த தியானம் இருக்க வேண்டும்... அந்த ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் தியானத்திலே நீங்கள் வாழும் வாழ்க்கைக்கான அர்த்தம் உங்களுக்கு புரிந்துவிடும்.. அதை தினந்தோறும் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரிந்துவிடும்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடுகிறீர்கள் என்றால் உங்கள் வாழ்நாளில் ஒரு நாள் வீணடிக்கப்படுகிறது என்று அர்த்தம்... ஒரு விஷயத்தை ஒரு வாரம் கழித்து செய்து கொள்வோம் ஒரு மாதம் கழித்து செய்து கொள்வோம் உங்கள் வாழ்நாளில் அந்த ஒரு வாரமும் ஒரு மாதமும் வீணடிக்கப்படுகிறது என்று அர்த்தம்... அதான் நான் ஒருவரிடம் கேட்டேன் நீ எத்தனை ஆண்டு காலம் வாழ நினைக்கிறாய் என்று இப்போ வயது என்ன என்றும் கேட்டேன் 40 வயது என்று கூறினார் இந்த 40 ஆண்டு காலமும் நீ வாழ வேண்டும் என்று நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டாயா என்று கேட்டேன்... இல்லை என்று கூறினார்... அதேபோல் 70 வயதான ஒரு அய்யாவிடம் கேட்டேன் நீங்கள் 70 ஆண்டு காலமும் நீங்கள் வாழ வேண்டும் என்று நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டீர்களா என்று கேட்டேன்.. இல்லை என்று கூறினார்.. மீதமுள்ள அந்த 20 ஆண்டுகாலம் தான் நான் வாழ போகிறேன் என்று கூறினார்... இதுதான் ஒவ்வொருவருக்கான மனநிலை.
உணவு பழக்கங்கள்
சாப்பாட்டு முறை நாம் அனைவரும் சாப்பிடும் உணவு முறையில் ஆரோக்கியம் இருக்க வேண்டும். சாப்பாட்டு விஷயத்தில் நன்றாகவே கவனம் செலுத்த வேண்டும். சாப்பாடு மட்டும்தான் உங்கள் உடலை ஆரோக்கியப்படுத்தக்கூடியது அதை உங்களுக்கு பிடித்த மாதிரி சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.. நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து அனைவரும் சாப்பிடுங்கள்.. இன்று நவதானியங்களில் எவ்வளவோ வந்துவிட்டது எவ்வளவு வித்தியாசமான உணவு பழக்கங்கள் வந்துவிட்டது அதை எல்லாம் உண்டு சந்தோஷமாக இருங்கள்
என்னைப் பொறுத்தவரையில் நான் வீட்டிலேயே சாப்பிடுவதில்லை அது உங்கள் அனைவருக்கும் தெரியும். வருஷம் 365 நாட்களில் 300 நாட்கள் கடைகளிலும் போக்குவரத்துகளிலும் என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிடுவேன்.. ஆனால் தற்போது உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு மிகவும் அவசியமானதாக கருதுகிறேன்.
சாப்பாட்டில் போதும் என்ற மனம் இருக்க வேண்டும். பசிக்காக சாப்பிட வேண்டும் ருசிக்காக சாப்பிடக்கூடாது.. வயிறு நிறைந்த மாதிரி ஒரு உணர்வு இருந்தால் சாப்பாட்டில் இருந்து எழுந்து விட வேண்டும்.. அதற்கு மேல் அதிகமாக சாப்பிடக்கூடாது
மனிதனின் மனஅழுத்தம்
இயற்கையை ரசிக்க வேண்டும் இயற்கையின் மீது ஈடுபாடு வேண்டும்.
நமக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய விஷயங்களை ஒருபோதும் செய்ய வேண்டாம்.. வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கே.. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் இன்னொருத்தர் வாழ முடியாது.. இறைவன் அற்புதமான பிறவியை கொடுத்துள்ளான் அதை ரொம்ப சந்தோஷமாக வாழ வேண்டும். தொடர்ந்து நல்ல விஷயங்களை நமது கட்சியின் சார்பாக தேசிய செட்டிநாட்டு கழகத்தின் சார்பாக பேசுவோம்.
எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே தேடிச் செல்ல வேண்டும் மன அழுத்தத்தை தேடி செல்லக்கூடாது..
இப்போது நான் உட்பட எல்லோரும் மன அழுத்தத்தில் தான் இருக்கிறோம்.. மன அழுத்தம் தானாக வருகிறதா இல்லை நாம் தேடிப் போகிறோமா.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாம் தான் தேடி செல்கின்றோம்.. மன அழுத்தத்திற்கான மருந்து நம்மிடம் மட்டுமே உள்ளது.
மனம் எதை விரும்புகிறதோ அதை மட்டுமே செய்யுங்கள் என்று நான் கூறுவேன். ஒரு செடியை பார்த்தாலோ இல்லை ஒரு மனிதன் நாம் பேசுவதாலோ இவரைப் பார்த்தால் சந்தோஷம் இந்த வேலை செய்தால் சந்தோஷம் என்று தோன்றினால் அதை நாம் செய்ய வேண்டும் அதை நோக்கியே ஓட வேண்டும். நாம் ஒரு தொழில் செய்து அதன் மூலம் லாபம் வரும் என்றால் அதில் சந்தோஷம் ஏற்படும் என்றால் அதை நீங்கள் செய்யுங்கள்.
கட்சியின் பிரதான கொள்கை.. தூய காற்று, மண்வளம், நீர் வளம், எதிர்வரும் தலைமுறைக்கு தூய காற்றும் மண்வளத்தையும், வற்றாத தூய நீரையும், கொடுப்பதே நமது கட்சியின் பிரதான நோக்கம்..
இயற்கை முறையில் மனிதனின் ஆயுள் காலத்தை உயர்த்துவது
உடல் ஆரோக்கியத்துடனும் உள்ள ஆரோக்கியத்துடனும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் உயர்த்துதல் வேண்டும்.
குடும்பம்
நம்முடைய குடும்பம் மற்றும் உறவுகளுடன் நேரங்களை செலவிடுங்கள்... உங்களுக்கு தெரியும் எனக்கு அதற்கான நேரமே இல்லை ஆனாலும் சில சமயங்களில் எனக்குள்ளே ஏங்குவேன். பிள்ளைகள் என்னிடம் அப்பா உன்னை பார்த்து ஒரு வாரம் பத்து நாள் ஆகிவிட்டது அப்பா என்று கூறும் போது ஏக்கம் ஆக இருக்கும்..
என்னுடைய கட்டமைப்பை அப்படியே ஏற்படுத்தி கொண்டு விட்டேன்.. அதைத் தாண்டி பொது வாழ்க்கையில் எனது குழந்தைகள் மட்டுமின்றி என்னை சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான உறவுகளுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் பிரகாசமான இருக்க வேண்டும் என்று எதிர்காலம் இந்தப் பொது வாழ்க்கை பயணத்தில் மேற்கொண்டு உள்ளோம்.. அதனால் என்னை விட்டு விடுங்கள் நீங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள் சுற்றுலாக்கு அழைத்துச் செல்லுங்கள்.. குடும்பங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
குடும்பத்தில் மனைவி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக நேசியுங்கள் அவர்களிடம் இருக்கும் நல்லது கெட்டதுகளை குறிப்பிட்ட கூறுக இதுதான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான சந்தோஷம் உற்சாகம் ஏற்படும் உங்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்வார்கள்
என்னுடைய நண்பர் குணசேகர் அவர்கள் சொல்லுவார் நமக்கு உலகமே உலகம் ஆனால் நம் மனைவிக்கோ நாம்தான் உலகம்.
மகளிர் மேம்பாடு
அரசு வழங்கக்கூடிய அத்தனை வங்கி சார்ந்த மானிய கடன்கள் 70% பெண்களுக்கு கிடைத்திட பாடுபடுவோம்.
ஆணுக்குப் பெண் சமம் என்பதில் நமது கட்சி உறுதியாக இருக்கிறது.
பெண்களின் பொருளாதார உயர்வுக்காக பாடுபடுவோம்.
விவசாயிகள்
வெளிநாட்டில் அறிவியல் தொழில்நுட்பமான விவசாயத்தை நம்மளுடைய பாரத தேச தமிழக விவசாயிகளுக்கு கொண்டு வர அரும்பாடு படுவோம், இதன் மூலம் குறைந்த நிலப்பரப்பில் குறைந்த செலவில் அதிக சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்போம்.
விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் குறைந்தபட்ச நிர்ணயம் கொடுக்க பாடுபடுவோம்.
இளைஞர்கள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய அத்தனை இறக்குமதி உற்பத்தி பற்றி நமது நாட்டு இளைஞர்களுக்கு முழு பெயர்ச்சி அளித்து அது சம்பந்தமான தொழில்நுட்ப கல்லூரிகளை ஏற்படுத்தி வங்கி சார்ந்த பெரும் நிதிகளை வழங்கி தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, நாட்டில் இளம் தொழில் அதிபர்களை உருவாக்க பாடுபட வேண்டும்.
அதேபோல் நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஏற்றுமதி சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் நம் நாட்டு இளைஞர்களின் மூலம் ஏற்படுத்தி வங்கி சார்ந்த உதவிகளை கொடுத்து உலகம் முழுவதும் ஏற்றுமதியில் தன்னிறைவு பெற்ற நாடாக பாரத தேசம் உருவாக பாடுபடுவோம்.
இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய விற்பனை சந்தையை விரிவு படுத்த பாடுபடுவோம்.
வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்திய இளைஞர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்த காலம் போல் நம் நாட்டிலே அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்த ஊதியமும் வேலையும் நம் நாட்டிலே ஏற்படுத்திக் கொடுப்போம்.
வெளிநாட்டில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை உள்நாட்டிலே ஏற்படுத்தி கொடுக்க பாடுபடுவோம், அத்தனை தொழில் துறைகளிலும் ஏற்றுமதி இறக்குமதியிலும் பயிற்சி வழங்கி இளைஞர்களை இளம் தொழிலதிபர்களாக உருவாக்க பாடுபடுவோம்.
வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டு தரத்தில் இந்தியாவில் கல்வி நிறுவனங்களையும் படைத்து முடித்தவுடன் வேலை வாய்ப்புடன் கூடிய கல்விகளை நமது பாரத தேசத்திலே படிக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு இதுபோன்ற புதுவிதமான திட்டங்களை கூறி இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பாடுபடுவோம்